உள்ளடக்கத்துக்குச் செல்

தயோகார்பமோயில் குளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தயோகார்பமோயில் குளோரைடின் பொது அமைப்பு

தயோகார்பமோயில் குளோரைடு (Thiocarbamoyl chloride) என்பது R2NC(S)C என்ற வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிமகந்தகச் சேர்மமாகும். இவ்வாய்ப்பாட்டிலுள்ள ’R’ அல்கைல், அரைல் போன்ற தொகுதிகளைக் குறிக்கிறது[1]. மின்னணு கவரிகளான இச்சேர்மங்கள் R2NC(S)+ அயனிகளுக்கான மூலங்களாக உள்ளன. R2NC(O)Cl என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட கார்பமைல் குளோரைடுகளை ஒத்த சேர்மங்களாக தயோகார்பமோயில் குளோரைடுகள் காணப்படுகின்றன. இருமெத்தில்தயோகார்பமோயில் குளோரைடு என்ற சேர்மத்தை இவ்வகைக்கு ஒரு பொது உதாரணமாகக் கூறலாம். வெளிர் மஞ்சள் நிறத்தில் எளிதில் ஆவியாகக் கூடிய ஒரு திண்மமாக இது காணப்படுகிறது, இதன் மூலக்கூறு வாய்ப்பாடு Me2NC(S)Cl ஆகும். இவ்வேதிப்பொருளுக்கான அடையாளப் பதிவு சிஏஎசு எண் 16420-13-6 ஆகும்.

தயாரிப்பும் வேதிவினையும்

[தொகு]

தொடர்புடைய தயூரம் இருசல்பைடுகளை குளோரினேற்றம் செய்து தயோகார்பமோயில் குளோரைடுகள் தொகுக்கப்படுகின்றன.

[R2NC(S)]2S2 + 3 Cl2 → 2 R2NC(S)Cl + 2 SCl2

தயோகார்பமோயில் குளோரைடுகள், இருதயோகார்பமேட்டுகளுடன் (R2NCS2-) வினைபுரிந்து தயூரம் சல்பைடுகளைத் தருகின்றன[R2NC(S)]2S.

மேற்கோள்கள்

[தொகு]
  1. R. J. Cremlyn “An Introduction to Organosulfur Chemistry” John Wiley and Sons: Chichester (1996). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0 471 95512 4.